பஸ் - லாரி நேருந்து நேர் மோதி விபத்து - 4 பேர் பலி

பீகாரில் இன்று (பிப்.06) அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பெகுசராய் என்ற பகுதியில் எதிரே வந்த லாரி மீது பேருந்து மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த பயங்கர சாலை விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags :