போதை மாத்திரை கஞ்சா பறிமுதல் வாலிபர் கைது

கோவை உக்கடம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுங்கம் பைபாஸ் ரோடு அண்ணாநகரில் ஒரு வாலிபர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்தார். அவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்தார். போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அவர் கஞ்சா மற்றும் போதைப் பொருள் மாத்திரைகளை விற்பனை செய்வதில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போதைப் பொருள் மாத்திரைகளை பதுக்கி விற்ற கோட்டை மேடு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த முகமது பாரூக் (38) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 70 போதைப் பொருள் மாத்திரைகள், 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags :