டெங்கு பரவுவதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கை - ஓபிஎஸ்

by Staff / 11-09-2023 01:23:49pm
டெங்கு பரவுவதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கை - ஓபிஎஸ்

டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் கொசுக்களால் பரவும் தொற்று நோயான டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகறிது. சென்னை மாநகராட்சியின் அலட்சியத்தால் நேற்று 4 வயது சிறுவன் டெங்கு பாதித்து உயிரிழந்தான். டெங்குவின் தீவிரம் குறித்து விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், அறிகுறி இருப்பவர்களுக்கு சிகிச்சை அளித்து உயிரிழப்பு போன்ற நிலை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via
Logo