ஹெலிகாப்டர் சகோதரரில் ஒருவருக்கு கரோனா

by Editor / 17-08-2021 09:48:28am
ஹெலிகாப்டர் சகோதரரில் ஒருவருக்கு கரோனா

கும்பகோணத்தில் நிதிநிறுவனம் என்கிற பெயரில் பல கோடி மோசடி செய்து தலைமறைவான பாஜக பிரமுகர்கள் கணேஷ் மற்றும் சுவாமிநாதனை போலீஸார் கடந்த 6 ஆம் தேதி கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் தீட்சதர் தெருவைச் சேர்ந்தவர்கள் கணேஷ் - சுவாமிநாதன் சகோதரர்கள். இவர்கள் விக்டரி என்கிற பெயரில் நிதி நிறுவனங்கள், வெளிநாட்டு மாடுகளைக் கொண்டு மூன்று இடங்களில் பால் பண்ணை, ஹெலிகாப்டரை வாடகைக்கு விடுவது எனப் பல தொழில்களை செய்துவந்தனர். எப்போதும் இரு சகோதரர்களும் ஒன்றாகவே ஹெலிகாப்டரில் வலம் வந்ததால், இவர்களை ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்ற பெயரிலேயே பலரும் அழைத்தனர்.

 

Tags :

Share via