.தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கும் சி. பி.ஐ ஜனவரியில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல்.
கரூர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சி.பி.ஐ தமிழக வெற்றிக்கழகம் பொதுச் செயலாளர் ஆனந்த், ஊடகப் பிரிவு செயலாளர் ஆதார் அர்ஜுனா ,துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டவருக்கு சமன் அனுப்பி ஆஜராக பணித்திருந்தது. அதன்படி, நேற்று நால்வரும் சிபிஐ அலுவலகத்தில் நேரில் சென்றனர். அதன் தொடர்ச்சியாக என்றும் நால்வரும் ஆஜராகி உள்ளனர்.,மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர் ஆயினர். கூட்ட நெரிசலுக்கான காரணங்களை பல்வேறு கேள்விகளை சிபிஐ தரப்பிலிருந்து கேட்கப்பட்டிருப்பதாகவும் கட்சி என்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தது .விஜய் பரப்புரைக்கான நேரம் ,,அவர் வந்த நேரம் போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கும் சி. பி.ஐ ஜனவரியில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல்.
Tags :


















