பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 பேர் பலி

by Staff / 03-01-2024 11:56:31am
பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 பேர் பலி

அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இன்று காலை டெர்கான் அருகே பலிஜான் என்ற இடத்தில் 45 பேருடன் சென்ற பேருந்து சரக்கு வாகனம் மீது மோதியதில் இந்த விபத்து நடந்ததாக கோலாகாட் காவல் கண்காணிப்பாளர் ராஜேன் சிங் தெரிவித்தார். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நான்கு வழிச்சாலையின் ஒரு பகுதி சேதமடைந்ததால், தவறான பக்கத்தில் இருந்து லாரி வந்து கொண்டிருந்தது. பேருந்து சரியான பாதையில் சென்றது. பனிமூட்டம் இந்த விபத்திற்கு முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via

More stories