ஆளுநரும், முதல்வரும் இணைந்து செயல்பட வேண்டும் - அன்புமணி

by Staff / 19-11-2023 12:32:48pm
ஆளுநரும், முதல்வரும் இணைந்து செயல்பட வேண்டும் - அன்புமணி

தமிழக முதலமைச்சரும், ஆளுநரும் இணைந்து செயல்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நிலவிவரும் நிலையில், இருவரும் இரண்டு பக்கம் செல்வதால் பாதகம் தமிழக மக்களுக்குத்தான். தமிழக வளர்ச்சிக்கு தடையாக இருக்கக் கூடாது. ஆளுநர் அரசியல் கட்சி சார்ந்தவராக இருக்கக் கூடாது. ஆளுநர் அரசியல் பேசினால் மக்களுக்குத்தான் ஆபத்து. அரசுடன் இணக்கமாக ஆளுநர் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் நேற்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories