திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை

by Staff / 27-01-2024 12:41:14pm
திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை

திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. திமுக நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கோவை, சேலம் மாவட்டங்களின் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, கே.என்.நேரு முத்துசாமி , தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கொங்கு மண்டலங்களில் உள்ள கட்சியின் தேர்தல் பணிகள், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via