கஞ்சா வழக்குகளில் தப்பிக்க வைக்கப்படும் குற்றவாளிகள்: அன்புமணி குற்றச்சாட்டு

by Staff / 13-05-2024 04:16:21pm
கஞ்சா வழக்குகளில் தப்பிக்க வைக்கப்படும் குற்றவாளிகள்: அன்புமணி குற்றச்சாட்டு

கஞ்சா வழக்குகளில் குற்றவாளிகள் தப்பிக்க வைக்கப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கஞ்சா கடத்தியதாக 2013, 2019 ஆகிய ஆண்டுகளில் கையும், களவுமாக பிடிக்கப்பட்ட பாசல் என்பவர் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாசல், கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட போதிலும் விசாரணையை காவல்துறையினரே சீர்குலைத்ததாகவும், அவரது விடுதலைக்கு காவல்துறையினரே காரணமாக இருந்ததாகவும் நீதிபதி குற்றஞ்சாட்டியுள்ளார். காவல்துறையினரின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo