அக்டோபர் 10ஆம் தேதி சீமான் மீண்டும் ஆஜராக உத்தரவு

அவதூறு வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜரானார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அருந்ததியர் சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சீமானுக்கு சம்மன் அனுப்பபப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார். இந்த வழக்கில் புகார் மனுதாரர் ஆஜராகாததால் ஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதே தேதியில் சீமான் மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags :