மீண்டும் துரைசிங்கம் ஆகிறார் சூர்யா?
இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் சிங்கம். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து சிங்கம் 2, சிங்கம் 3 , ஆகிய படங்கள் வந்தன. இதில் சிங்கம் 3 சரியான வெற்றியை பெறாததால் சிங்கம் மோடில் இருந்து சூர்யா வெளியே வந்தார். இந்நிலையில் இந்த நிலையில், சிங்கம் 4-ம் பாகம் பற்றி சமீபத்திய பேட்டியில் பேசி இருக்கிறார் ஹரி. அதில் அவர் கூறியதாவது : “நான் எங்கு சென்றாலும் சிங்கம் 4 பற்றி கேட்கிறார்கள். அது ஹாட்ரிக் ஹிட் அடித்த படம் என்பதால் அடுத்த பாகத்திற்கு அதிக உழைப்பு தேவைப்படுகிறது. எனக்கும் சூர்யாவுக்கும் இடையே எந்தவித பிரச்சனையும் இல்லை. சிங்கம் 4 உருவாவது பற்றி காலம் தான் பதில் சொல்லும்” என கூறி இருக்கிறார்.
Tags :