ராதிகா சரத்குமார்-விஜய பிரபாகரன் விருதுநகரில் மோத உள்ளனர்.

by Staff / 22-03-2024 04:49:18pm
ராதிகா சரத்குமார்-விஜய பிரபாகரன் விருதுநகரில்  மோத உள்ளனர்.

தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. பல்வேறு தொகுதிகளில் மூன்று கூட்டணி நட்சத்திர வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோத உள்ளனர். விருதுநகர் தொகுதி, அதிமுக கூட்டணி சார்பில் மறைந்த தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும்  பா.ஜ.க. சார்பில் நடிகையும் சரத்குமாரின் மனைவியுமான ராதிகாவும், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸை சேர்ந்த மாணிக்கம் தாகூரும் நேருக்கு நேர் மோத உள்ளனர். இதனால், விருதுநகர்  தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

 

Tags :

Share via