ஜிகா டெங்கு பரவல் - பஸ்களில் கண்காணிப்பு.
ஜிகா டெங்கு பரவல் கேரளா செல்லும் பஸ்களில் கண்காணிப்பு,
கோவை மாவட்டத்தில் , ஜிகா, டெங்கு பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உத்தரவின்பேரில், மாநகரப் பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்களும், புறநகர் பகுதிகளில் சுகாதாரத் துறை ஊழியர்களும் நோய்த் தொற்று தடுப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பயணிகள் முக கவசம் அணிந்து பயணம் செய்கின்றனரா என்பதையும். முக கவசம் அணியாதவர்களை முக கவசம் அணிந்து பயணிக்க அறிவுறுத்தி வருகின்றனர். .இது குறித்து, மாநகராட்சி அதிகாரி , ''கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து கேரளத்துக்கு தினமும் 25-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பஸ்கள் மூலமாக நோய்த் தொற்று பரவமால் தடுக்கும் விதமாக, பஸ்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்று தாக்கம் இல்லை என்கிற நிலை வரும் வரை இப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்'' என்றார்.
Tags :



















