பயங்கர தீ விபத்தில் சிக்கி 44 பேர் பலி

by Staff / 01-03-2024 12:18:57pm
பயங்கர தீ விபத்தில் சிக்கி 44 பேர் பலி

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். டாக்காவின் பெய்லே சாலையில் ஏராளமான ஹோட்டல்கள் உள்ள நிலையில், ஏழு மாடி கொண்ட ஹோட்டல் ஒன்றில் இந்த தீவிபத்து நடந்துள்ளது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo