டெல்லி ஏசிபி மகன் கொலை; கால்வாயில் தள்ளிவிட்ட நண்பர்கள்
டெல்லி காவல் துறையின் உதவி ஆணையரின் மகன் கடன் தொடர்பான தகராறில், அவரது நண்பர்கள் இருவரால் ஹரியானாவில் கால்வாயில் தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். லக்ஷ்யா சவுகான் (26) என்ற இளைஞரின் உடலைக் கண்டுபிடிக்க தொடர் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகளில் ஒருவர் கைதான நிலையில், மற்றொருவர் தலைமறைவாக உள்ளார். சவுகான், தனது இரு நண்பர்களான விகாஸ் பரத்வாஜ் மற்றும் அபிஷேக் ஆகியோருடன் திங்கள்கிழமை ஹரியானாவின் சோனேபட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றதாக போலீசார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட சவுகான், திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
Tags :