அதிக பாரம் ஏற்றி சென்ற இரண்டு லாரிகளுக்கு அபராதம்
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து பெரிய கனரக டாரஸ் லாரிகளில் கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது. இந்த லாரிகளால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்த சமூக ஆர்வலர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் குலசேகரம் வழியாக அதிக பாரம் ஏற்றி வந்த இரண்டு கனரக லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் ரூ. 97 ஆயிரம் அபராதம் விதித்தார்.
Tags :



















