கஞ்சா விற்க முயன்ற வாலிபர்கள் கைது

by Staff / 17-11-2022 01:53:20pm
கஞ்சா விற்க முயன்ற வாலிபர்கள் கைது

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து சென்றார். குளச்சல் மெயின்ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியருகே செல்லும்போது அங்கு சாலையோரம் சந்தேகத்திற்கிடமாக 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் வாலிபர்கள் தப்பியோட முயற்சித்தனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில் வாலிபர்கள் ஜார்க்கண்ட் மாநிலம் மச்சிய சிமாதவை சேர்ந்த சிகுகுமார்(26)மற்றும் ஒடிசா  மாநிலம் அடுவன் பகுதியை சேர்ந்த தபான்குமார் (32)என்பதும், இவர்கள் குளச்சல் மீன் பிடி துறைமுகத்தில் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. மேலும் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலம் விற்க முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo