நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணைந்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணைந்தார். ஊட்டச்சத்து நிபுணர் என்பதால் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் திமுகவில் இணைந்தேன். பெண்களுக்கு மரியாதையை கொடுக்கும் கட்சி திமுக மட்டும் தான். எல்லா மதங்களும் மரியாதை தரும் ஒரே கட்சி திமுக தான் என்று திவ்யா கூறியுள்ளார்.தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கள அரசியலுக்கு வரவில்லை, புகைப்படம் பதிவிட்டு மட்டுமே அரசியல் செய்ய முடியாது என திவ்யா சத்யராஜ் காட்டமாக விமர்சித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த திவ்யா சத்யாராஜ், விஜய் இதுவரை மக்கள் பணி செய்யவில்லை. கொரோனா காலத்தில், இயற்கை பேரிடர் காலத்தில் விஜய் மக்கள் பணி ஆற்றவில்லை. மக்களுக்கு நேரடியாக வேலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
Tags : நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணைந்தார்.