ஆப்பிள் ஐபோன் உபயோகித்தால் ஆபத்தா?

by Editor / 15-09-2021 03:05:35pm
ஆப்பிள் ஐபோன் உபயோகித்தால் ஆபத்தா?

உலகம் முழுவதும் ஆப்பிள் ஐபோனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் ஆப்பிள் ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆப்பிள் நிறுவன ஆப்பிள் ஐபோனை பயன்படுத்துவோரை குறிவைத்து பெகாசஸ் மென்பொருள் மூலமாக உளவு பார்க்கும் நடவடிக்கையில் தொடர்வதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெகாசஸ் என்ற செயலி மூலமாக பல்வேறு நாடுகளில் அரசை எதிர்ப்பவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை உளவு பார்க்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்களின் செல்போன்கள் பெகாசஸ் செயலி மூலமாக உளவு பார்க்கப்பட்டதாக கூறப்பட்டது என்பதும் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சவுதி அரேபியாவில் அரசியல் தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் ஐபோன்கள் பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், மேக் ஐபோன் மற்றும் ஆப்பிள் கடிகாரங்கள் ஆகியவற்றில் பெகாசஸ் செயலியை ஊடுருவ வைத்து அவர்களை உளவு பார்ப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆண்ட்ராய்டு மொபைலை போல் ஆப்பிள் ஐபோனில் அவ்வளவு எளிதாக ஒரு செயலியை இன்ஸ்டால் செய்ய முடியாது என்று, ஆப்பிள் ஸ்டோரில் என்ன செயலிகள் இருக்கின்றதோ அந்த செயலிகளை மட்டுமே தகுந்த பாதுகாப்புடன் இன்ஸ்டால் செய்ய முடியும் என்றும், ஆனால் இதிலும் பெகாசஸ் செயலியை ஹேக்கர்கள் ஐபோன் உரிமையாளருக்கு தெரியாமல் இன்ஸ்டால் செய்து இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

இதனை அடுத்து புதிய அப்டேட்டை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் பயன்படுத்துபவர்களை குறிவைத்து பெகாசஸ் செயலி மூலம் ஹேக்கர்களால் உளவு பார்ப்பதாக வெளிவந்திருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via