கார் விபத்து.. 7 பேர் துடிதுடித்து பலி

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் வடிகாலில் விழுந்த கார் விபத்தில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். டிண்டோரி கல்வன் சாலையில், ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்கும், ஆல்டோ காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மோதிய உடனே, ஆல்டோ கார் வடிகாலில் விழுந்தது. இதில், காரில் இருந்த மூன்று பெண்கள், மூன்று ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்தனர். இந்த விபத்தில் பைக்கில் சென்ற இருவர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :