எழுத்தாளர்களுக்கு "கனவு இல்லம்" கட்டித் தரப்படும் - முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

by Editor / 30-06-2021 04:25:32pm
எழுத்தாளர்களுக்கு


பல விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு "கனவு இல்லம்" கட்டித் தரப்படும் மற்றும் இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு "இலக்கிய மாமணி விருது" வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.க.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு  பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.அந்த வகையில்,பல விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் கட்டித் தரப்படும் மற்றும் இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு இலக்கிய மாமணி விருது வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ளஅறிக்கையில்:
"தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும். இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக விருது வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், "இலக்கிய மாமணி" என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும். இவ்விருதாளர்களுக்கு பாராட்டுப் பத்திரம் மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் ரொக்க வழங்கப்படும்".என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via