மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து மழை

மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் இன்று பலத்த காற்று இடியுடன் கனமழை பெய்தது. பலத்த காற்று வீசியதால் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள நேரு நகர் பகுதியில் புங்கைமரம் மின் கம்பம் மீது சாய்ந்தது. இதனால் இந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயணைப்புத் துறையினர் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதேபோன்று நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து மின் துண்டிப்பு.சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி.
Tags :