50,123 வாக்குகள் வித்தியாசத்தில்  பினராயி விஜயன் வெற்றி

by Editor / 02-05-2021 07:46:27pm
50,123 வாக்குகள் வித்தியாசத்தில்  பினராயி விஜயன் வெற்றிகேரள மாநிலம் தர்மடம் சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வர் பினராயி விஜயன் 50,123 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தர்மடம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் 95,522 வாக்குகள் பெற்றுள்ளார். இவருக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் சி. ரகுநாதன் 45,399 வாக்குகள் பெற்றுள்ளார்.
கேரளத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 95 இடங்களிலும், காங்கிரஸ் 42 இடங்களிலும், பிற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. பாஜக ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை.

 

Tags :

Share via
Logo