டைனோசர்களுக்கு வாழ்விடம் பிரிட்டன்: ஆய்வில் தகவல்
டைனோசர்களுக்கு வாழ்விடமாக பிரிட்டன் இருந்திருக்க வேண்டும் என்று தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பல வருட காலப்பகுதியில் இந்த எலும்புகள் ஐல் அவ் வைட், பிரிக்ஸ்டோன் அருகே உள்ள கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டன.
செளத்தாம்ப்டன் பல்கலைக் கழகத்தின் ஆய்வு மாணவர் கிறிஸ் பார்கர், "பாரியோனிக்ஸில் கண்டறியப்பட்ட டைனோசர் எச்சங்களுடன் தற்போதைய டோனோசர் எச்சங்கள் வேறுபடுகின்றன. இதை பார்க்கும்போது நாம் நினைத்ததை விட பல வகை ஸ்பினோசாரிட் டைனோசர்களுக்கு வாழ்விடமாக பிரிட்டன் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது'' என்றார்.
மூன்று கால் விரல் கொண்ட தெரோபாட் டைனோசர்கள் நிபுணரான இணை எழுத்தாளர் டேரன் நயிஷ், ""பாரியோனிக்ஸ் போன்ற டைனோசர்கள் ஐல் அவ் வைட் கண்டுபிடிப்புக்கு முன்பே இருந்ததை இரண்டு தசாப்தங்களாக நாங்கள் அறிந்திருந்தோம். ஆனால் இப்போது இந்த இரண்டு வகை டைசோனர்களின் எச்சங்களை கண்டுபிடித்திருப்பது ஆச்சரியமூட்டுகிறது," என்றார்.
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிற்குள் சிதறிச் செல்வதற்கு முன்பாக ஸ்பினோசோரிட்கள் ஐரோப்பாவில் தான் முதலில் உருவாகியிருக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.சாண்டவுனில் உள்ள டைனோசர் அருங்காட்சியகத்தில் சுமார் 50 எலும்புகளின் சேகரிப்பு காட்சிப்படுத்தப்படவுள்ளது.
இது குறித்து அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளர் டாக்டர் மார்ட்டின் மன்ட் கூறுகையில், "ஐரோப்பாவிலேயே ஐல்அவ் வைட்டில்தான் டைனோசர்களின் முதன்மையான இருப்பிடம் இருந்திருக்க வேண்டும் என்பதற்கு இந்த ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன," என்று தெரிவித்தார்.
Tags :