மாவட்ட பொறுப்பாளரை கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் கூச்சல் குழப்பம்.
நெல்லை மாநகராட்சியின் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு 9 நபர்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
மேல்முறையீட்டு குழு தேர்தலில் திமுக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட திமுக கவுன்சிலர்கள் மூன்று பேர் வெற்றிபெற்றுள்ளனர்.திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன் கான், தேர்தல் குறித்து பேச வர சொல்லி அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக திருநெல்வேலி மண்டல திமுக சேர்மன் மகேஸ்வரி மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார்.மேலும் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு தேர்தல் தொடர்பாக திமுக மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன் கான் மண்டல தலைவர்களை அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக மண்டல தலைவர்கள் மாநகராட்சி ஆணையர் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த விவகாரத்தை பேசாமல் கூட்டத்தை நடத்தக் கூடாது எனவும் கோஷங்கள் எழுப்பினர்,திமுகவின் மாநகராட்சி மேயரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் ஒரு தரப்பினர் ஒன்றிணைந்து கோஷங்களை எழுப்பினர்.நெல்லை டவுன் சாலைக்கு நெல்லை கண்ணன் பெயரை வைக்கக்கூடாது என்று திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்மானம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டத்தில் எழுந்த கோஷ்டி பூசல் இப்போது நெல்லையிலும் எழுந்துள்ளது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது.
Tags :