தவெ.க.பொதுச்செயலாளர் பு ஸ்சி ஆனந்த்,ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர்பலியானதை அடுத்து தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் பு ஸ்சி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் காவல்துறை பிணையில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டு ,கைது செய்ய தேடும் நிலையில் இருவரும் முன்ஜாமின் கேட்டு விண்ணப்பித்திருந்த ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.. சென்னை உயர்நீதிமன்றம் இருவருக்கும் ஜாமின் மறுத்ததை அடுத்து இருவரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற நிலை உருவாகி உள்ளது.
..இதனோடு, தமிழக வெற்றிக்கழக நாமக்கல் மாவட்ட செயலாளர் மதியழகன் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது..
சமூக ஊடகத்தில் தமிழக வெற்றிக்கழக தேர்தல் மேலாண்மை குழு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் கலவரத்தை தூண்டும் மதமாக பதிவிட்டதற்கு காவல்துறை அவர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
Tags :