தாஜ்மஹாலின் சுவர்களை 45 ஆண்டுகளில் முதல் முறையாக தொட்ட யமுனா நதி.
டெல்லி: ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலின் சுவர்களை 45 ஆண்டுகளில் முதல் முறையாக யமுனா நதி தொட்டுள்ளது. ஆற்றின் நீர் தசரா காட் மற்றும் இதிமாத்-உத்-தௌலாவின் கல்லறையிலும் நுழைந்துள்ளது. இருப்பினும், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,தற்போது 499.1 அடியாக உள்ள யமுனை ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :