சீனாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா

by Admin / 12-03-2022 12:08:26pm
சீனாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா


சீனாவில் முதல்முறையாக 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு, உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. இதன் தாக்கத்திலிருந்து உலக நாடுகள் ஓரளவு மீண்டு வரும் நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகிறது.

ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள யூசெங், ஜில்லின் மாகாணத்தில் உள்ள சாங்சுன் ஆகிய நகரங்களில் கடுமையான முழுமுடக்கம் அமல் படுத்தப் பட்டுள்ளது. கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. 

பொதுமக்கள் வெளியே செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீடுவீடாகச் சென்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப் பட்டு வருகின்றன. நாடு முழுவதும் வெள்ளியன்று 397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 74 பேர் பள்ளி மாணவர்கள் ஆவர். தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via