பிரபல ரவுடி வெட்டிக் கொலை

by Staff / 27-04-2024 02:27:55pm
பிரபல ரவுடி வெட்டிக் கொலை

ஓசூர் அருகே தளி ஜெயந்தி காலனியில் நேற்றிரவு 35 வயது மதிக்கத்தக்க நபர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். போலீஸ் விசாரணையில் அது பிரபல ரவுடியான குனிக்கல் சதீஷ் (34) என தெரியவந்தது. அவர் கஞ்சா கடத்தல், கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர் எனவும் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். குனிக்கல் சதீஷ் எதற்காக வெட்டி கொல்லப்பட்டார் மற்றும் அவரை கொன்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via