கொரோனா சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் மரணம்!

by Editor / 18-04-2021 04:19:31pm
கொரோனா  சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் மரணம்!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறை திணறி கொண்டிருக்கிறது. மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு பாதிப்பு மோசமாகியுள்ளது. இதனிடையே அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், காவலர்கள், செவிலியர்கள் என பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகிறது. அதில் சிலர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. இந்த நிலையில், சென்னை யானைக்கவுணி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல்

(57) கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9ம் தேதி இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் போது அதிகளவு சென்னையை சேர்ந்த காவலர்களே உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று சென்னையை சேர்ந்த சக்திவேல் தற்போது உயிரிழந்திருப்பது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் காலக்கட்டத்தில் மிக நெருக்கடியான சூழலில் சக்திவேல் பணியாற்றியதால் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :

Share via

More stories