ஈரோடு இடைத்தேர்தல்:ஓ.பி.எஸ். தரப்பு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 23ம் தேதி
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா, மாரடைப்பால் மரணமடைந்ததையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த தொகுதிக்கான இடைதேர்தல், பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து அங்கு உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் ஈரோடு மாநகராட்சியில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள் மற்றும் பெயர்களை மறைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதனிடையே பொது இடங்களில் அரசியல் கட்சி விளம்பரங்கள் அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளை மூடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்நிலையில், அந்த தொகுதிக்கான இடைதேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 31ம் தேதி தொடங்குகிறது.
இந்த சூழலில் வரும் 23ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளதாக ஒபிஎஸ் அறிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags :