பொங்கல் விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயங்குவதில் சிக்கல்

by Staff / 09-01-2024 11:35:06am
பொங்கல் விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயங்குவதில் சிக்கல்

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை, கோவை, சேலம், கும்பகோணம், விழுப்புரம், மதுரை, நெல்லை கோட்டங்களில் உள்ள பல்வேறு பணிமனைகளில் இருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனினும் சில இடங்களில் பேருந்துகள் குறைவாகவே இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், வரும் வெள்ளிக்கிழமை முதல் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கபடவுள்ளன. ஆனால் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாத பட்சத்தில் பொங்கல் பண்டிகைக்கு பேருந்துகளை இயக்க மாட்டோம் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories