அண்ணாமலைக்கு அமைச்சர் மூர்த்தி பதில்
பத்திரப் பதிவுத் துறையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் தினமும் பதியப்படும் ஒவ்வொரு ஆவணத்துக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை கையூட்டாகப் பெறப்படுகிறது என உண்மைக்கு புறம்பான செய்தி பரப்பப்படுவது முற்றிலும் ஆதாரமற்ற உள்நோக்கம் கொண்ட செயலாகும் என்று வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார். ஆவணங்களைப் பதிவுக்கு கொண்டு வரும் பொதுமக்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களையும் ஆன்லைன் வழியாகவே செலுத்த வேண்டும். பதிவுத் துறையானது முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டு இதற்கென விரிவான மற்றும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.
Tags :