தீண்டாமை என்ற சொல்லுக்கு இடமில்லை - கனிமொழி எம்.பி.யிடம் உசிலம்பட்டி மக்கள் உறுதி

by Admin / 12-09-2023 11:49:11pm
 தீண்டாமை என்ற சொல்லுக்கு இடமில்லை - கனிமொழி எம்.பி.யிடம் உசிலம்பட்டி மக்கள் உறுதி

எங்கள் கிராமத்தில் தீண்டாமை என்ற சொல்லுக்கே இடமில்லை  கனிமொழி எம்.பி.யிடம் உசிலம்பட்டி மக்கள் உறுதி. எங்கள் கிராமத்தில் தீண்டாமை என்ற சொல்லுக்கு இடமில்லை என கனிமொழி எம்.பி.யிடம் உசிலம்பட்டி மக்கள் உறுதி அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம்  , உசிலம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 11 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த ஆக.25-ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் சமையலராக உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்முருகன் மனைவி முனியசெல்வி (29) என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 25-ம் தேதி முதல் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் சமையல் செய்து வருகிறார். இந்நிலையில், பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் காலை உணவு திட்டத்தில் மாணவ மாணவிகள் உணவை சாப்பிடாமல் தவிர்த்து வந்தனர். இதனால் காலை உணவு வீணாகும் நிலை ஏற்பட்டு வந்தது.

இதனால் மன உளைச்சல் அடைந்த சமையலர் முனிய செல்வி, மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை கோட்டாட்சியர் ஜேன் கிறிஷ்டி பாய், வட்டாட்சியர் மல்லிகா, காவல் ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது, உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்தம்மாள் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு வந்து, காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தனர். அப்போது பள்ளிக்கு வந்த 11 மாணவ மாணவிகளுக்கும், காலை உணவான வெண்பொங்கல் பரிமாறப்பட்டது. ஆனால், குழந்தைகள் உணவை அருந்தாமல் அழுது கொண்டே தட்டுகளுக்கு முன்பு அமர்ந்திருந்தனர். தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் நேரில் வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். .

 

Tags :

Share via

More stories

Logo