அமிர்தா விரைவு ரயில் கூடல் நகரில் இருந்து புறப்படும்.

by Editor / 24-01-2023 10:16:56pm
அமிர்தா விரைவு ரயில் கூடல் நகரில் இருந்து புறப்படும்.

மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக மின் தடங்கள் மாற்றும் பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ஜனவரி 26, 27, 30, பிப்ரவரி 1, 2, 3 ஆகிய நாட்களில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் அமிர்தா விரைவு ரயில் (16343) மதுரை ரயில் நிலையம் வரை இயக்கப்படாமல் கூடல் நகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். அதேபோல ஜனவரி 27, 28, 31, பிப்ரவரி 2, 3, 4 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய அமிர்தா விரைவு ரயில் (16344) கூடல் நகரில் இருந்து இயக்கப்படும். ஜனவரி 27, 28, 31, பிப்ரவரி 3, 4 ஆகிய நாட்களில் சென்னை - மதுரை - சென்னை தேஜாஸ் விரைவு ரயில் (22671/22672) மதுரை ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடைக்கு பதிலாக மூன்றாவது நடைமேடையில் கையாளப்படும்.

 

Tags :

Share via