தோட்டத்தில் புதுமண தம்பதி சடலம்

by Editor / 06-10-2021 10:26:59am
தோட்டத்தில் புதுமண தம்பதி சடலம்

மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை பிடித்து வர சென்ற தம்பதி மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்துள்ளது புதூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் ஜெயபிரகாஷ்.. 34 வயதாகிறது.. மனைவி பெயர் அஸ்வினி, 26 வயதாகிறது.

பொம்மசமுத்திரம் பகுதியில் மாட்டு தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார் ஜெயபிரகாஷ். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம்தான் ஆகிறது...இந்நிலையில் இவர்களின் வீட்டில் இருந்து பசுமாடு ஒன்று, மேய்ச்சலுக்கு சென்றுள்ளது.. ஆனால், இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.. அதனால், கணவன்-மனைவி இருவரும் இரவு நேரத்தில் மாட்டை தேடி சென்றுள்ளனர்.. ஆனால், இவர்களும் வீடு திரும்பவில்லை..

காலை வரை வீடு திரும்பாததால் உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்துள்ளனர்.அப்போது, தம்பதி இருவரும், ஒரு பசுமாடும், எலுமிச்சை பயிரிடப்பட்டுள்ள நிலத்தில் சடலமாக விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ந்தனர். இதையடுத்து, அந்த பகுதி மக்கள், திருவலம் போலீசாருக்கு தகவல் தந்தனர். போலீசாரும் விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.. அப்போதுதான் அவர்கள் கரண்ட் ஷாக் அடித்து உயிரிழந்தது தெரியவந்தது.. விளைநிலங்களை சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பன்றிகள் அவ்வப்போது வந்து சேதப்படுத்தி விடுவதால், மின்வேலி வைத்திருந்தனர்..

அதன் மூலம் மின்சாரம் பாய்ந்து தம்பதியும், பசுமாடும் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து சடலங்களை மீட்ட போலீசார் அடுக்கம்பாறையிலுள்ள வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மின்வேலி உள்ள நிலத்தின் ஓனர் விஜயகுமார் என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.. அந்த நிலத்தை விஜயகுமார் வாங்கி ஒரு மாதம்தான் ஆகிறதாம்.. அதனால் விசாரணையை போலீசார் விரிவுபடுத்தினர்..

இறுதியில், புதூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர், பன்றியை வேட்டையாடுவதற்காக விஜயகுமார் நிலத்தில் இருந்த மின்கம்பத்தில் இருந்ததில் இருந்து மின்சாரத்தை திருடி மின்வேலி அமைத்தது தெரிய வந்தது. கொக்கி மூலம் மின்சாரத்தைத் திருடி மின்வேலி அமைத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, கார்த்திக்கை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

Tags :

Share via