இந்திய ராணுவத்தின் புதிய தளபதியான உபேந்திர திவேதி

by Staff / 12-06-2024 12:22:10pm
இந்திய ராணுவத்தின் புதிய தளபதியான உபேந்திர திவேதி

இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி நியமிக்கப்பட இருக்கிறார். தற்போது ராணுவத்தின் துணைத் தளபதியாக பணியாற்றி வருகிறார். தற்போதைய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் சி பாண்டே ஜூன் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் அதன் பிறகு உபேந்திரா திவேதி பொறுப்பேற்க இருக்கிறார். அவர் 1984-ல் ராணுவ அதிகாரியாக (ஜம்மு & காஷ்மீர் ரைபிள்ஸ்) நியமிக்கப்பட்டார். மேலும், அவர் ராணுவத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியவர்.

 

Tags :

Share via