போலி பட்டா ரத்து செய்ய ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

by Staff / 10-02-2023 01:57:02pm
போலி பட்டா ரத்து செய்ய ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்போரூர் ஒன்றியம், வெண்பேடு கிராமம், தண்ணீர் பந்தல் விநாயகர் கோவில் சார்ந்த இடத்தை ஆய்வு செய்தார்.தொடர்ந்து, திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடு செய்தார். பின், தனியார் திருமண மண்டபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.இதில், ஹிந்து முன்னணி மாநில பொதுச்செயலர் பரமேஸ்வரன், திருப்போரூர் ஒன்றிய தலைவர் பாலமுரளி, மாவட்ட செயலர் ராஜசேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பின், நிருபர்களிடம் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்போரூர் ஒன்றியத்தில், வெண்பேடு கிராமத்தில் விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 4. 5 ஏக்கர் இத்திற்கு போலியாக பட்டா பதிவு செய்து, சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.தலைமை செயலர் இறையன்பு, இங்கு கலெக்டராக இருந்தபோது, அவை போலியான பட்டா என, ரத்து செய்தார்.இப்போது இருக்கும் ஆர். டி. ஓ. , அவர்கள் மீண்டும் அந்த பட்டாவை வழங்கியுள்ளார். உடனடியாக பட்டாவை ரத்து செய்ய வேண்டும்மேற்கண்ட இடத்தை பிரித்து வியாபாரம் செய்வதற்காக, சில அரசியல்வாதிகள் பின்னணியில் வேலை நடந்துவருகிறது. இதை தடுக்க, மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆண்டுக்கு 6 கோடி ரூபாய் வருமானம் உள்ளதாக கூறப்படுகிறது.கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கிரிவல பாதை வசதி, தங்கும் வசதி என, அனைத்து வசதிகளை செய்ய வேண்டும்.கோவிலின் வருவாய் என்ன செய்யப்படுகிறது என பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கோவிலுக்கு புதிய ஆதீனம் நியமிக்க வேண்டும்.பழநி கோவில் கும்பாபிஷேகம் ஆகமவிதிப்படி நடைபெறவில்லை. மாநிலம் முழுதும் கோவில் ஆக்கிரமிப்பு இடங்களை மீட்கவேண்டும்.தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள், ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்படுகின்றனர் இவ்வாறு கூறினார்.

 

Tags :

Share via