குருவாயூர் கோவிலில் துலாபாரம் கொடுத்த ஆளுநர்

by Staff / 07-05-2023 03:18:41pm
குருவாயூர் கோவிலில் துலாபாரம் கொடுத்த ஆளுநர்

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் குருவாயூர் கோவிலுக்கு வந்து துலாபாரம் காணிக்கை செலுத்தினார். கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ள பந்தலில் 83 கிலோ கதலி வாழைப்பழம் கொண்டு ஆளுயர எடை போடப்பட்டது. இதற்காக கோவிலுக்கு 4250 ரூபாய் செலுத்தப்பட்டது. மடம் குஞ்சுக்குட்டன் சுஹ்ரித் சமிதி ஏற்பாடு செய்திருந்த மடம் நினைவேந்தலைத் தொடக்கி வைப்பதற்காக ஆளுநர் குருவாயூர் வந்தார். கோவிலில் தரிசனம் செய்ய வருகை தந்த போது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories