குப்பையில் கிடந்த தங்க நாணயங்களை தூய்மை பணியாளருக்கு பாராட்டு குவிகிறது

by Editor / 22-10-2021 08:13:39pm
குப்பையில் கிடந்த தங்க நாணயங்களை தூய்மை பணியாளருக்கு பாராட்டு குவிகிறது

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் ராமன். இவர் 100 கிராம் தங்க நாணயத்தை தனது கட்டிலில் உள்ள மெத்தையின் கீழ் பாதுகாப்பாக பதுக்கி வைத்துள்ளார். இதனை அறியாத அவரின் மனைவி ஷோபனா மெத்தையின் கீழ் இருந்த 100 கிராம் தங்க நாணய கவரை குப்பையில் வீசி விட்டார்.
கணேஷ் வேலை முடிந்து வீடு வந்ததும், தான் வைத்திருந்த தங்க நாணயத்தை காணவில்லை என்று தனது மனைவிடம் தெரிவித்துள்ளார். அப்போது அவர் மனைவி, 'நான் தான் அதனை குப்பையில் போட்டுவிட்டேன். அது தங்க நாணயம் என்று எனக்குத் தெரியவில்லை' என்று தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், காவல் நிலையத்தில் ஏற்கனவே குப்பையை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர் மேரி, குப்பையில் கிடந்த 100 கிராம் தங்க நாணயத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
சுமார் 5 லட்சம் மதிப்பிலான அந்த தங்க நாணயத்தை தூய்மைப் பணியாளர் மேரி உரியவரிடம் ஒப்படைத்த செய்தி அறிந்த தலைமைச் செயலாளர் இறையன்பு, அவருக்கு பாராட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அவரின் அந்த கடிதத்தில், "அன்புள்ள மேரி அவர்களுக்கு வணக்கம்,
தேவை இருக்கும் இடத்தில் காணப்படும் தூய்மையே மகத்தானது.
குப்பையில் கிடந்த தங்கத்தை கண்டுபிடித்து,
உரியவரிடம் ஒப்படைத்த உங்கள் நேர்மையின் காரணமாக
உங்களிடமிருக்கும் தங்கமயமான உள்ளத்தை
நாங்கள் கண்டுபிடிக்க முடிந்தது.
நீங்கள் தூய்மைப் பணியாளர் மட்டுமல்ல.,
தூய்மையான பணியாளர்"என்று இறையன்பு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via