கொத்துக்கொத்தாய் செத்துமடிந்த 90 ஆடுகள்-  விரைந்து சென்று உதவிய தலைவர். 

by Editor / 17-12-2024 10:02:11am
கொத்துக்கொத்தாய் செத்துமடிந்த 90 ஆடுகள்-  விரைந்து சென்று உதவிய தலைவர். 

ஆய்க்குடி பேரூராட்சி பகுதி கம்பளி கிராமம் கிருஷ்ணசாமி தோப்பில்; கம்பிளி, மாரியப்பன், குத்தால ராமன், மற்றும் சாம்பவர் வடகரை சார்ந்த இருவருடைய ஆடுகள் பண்ணைகள் அமைத்து பராமரிக்கப்பட்டு வந்த நிலையில்  பெய்த கனமழையின் காரணமாக ஆட்டுப்பண்ணைக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் 90 ஆடுகள் நெஞ்சை உருக்கும் விதமாக உயிர் பலி ஏற்பட்டதை அடுத்து தகவலின் பெயரில், ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவர் க. சுந்தர்ராஜன், செயல் அலுவலர் , தமிழ் மணி, மன்ற உறுப்பினர் 
புணமாலை,  ஆகியோரின் துரித நடவடிக்கையின் பேரில், ஆய்க்குடி பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு ஆட்டு உடல்கள்  அனைத்தும்  தண்ணீரில் இறந்த 90 ஆடுகள் மீட்டு கால்நடை உதவி இயக்குனர் மகேஸ்வரி, கால்நடை ஆய்வாளர் சாமிநாதன், கால்நடை மருத்துவர்கள், ராதாகிருஷ்ணன், சசிகுமார், சிவக்குமார், கடையநல்லூர் துணை வட்டாட்சியர் சுடலை ஆண்டி, வருவாய் ஆய்வாளர் சங்கரன், கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி, சுகாதார மேற்பார்வையாளர் தர்மர் ஆகியோரின் கூட்டு முயற்சியுடன் ஆட்டு உடல்கள் அனைத்தும் உடற்கூறு   ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நவீன ஜேசிபி எந்திரம் கொண்டு குழி தோண்டி கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு, நல்ல முறையில் அப்புறப்படுத்தி சரி செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் தொற்றுநோய் அபாயம் ஏற்படாமல் சரி செய்யப்பட்டதுடன் பலியான ஆடுகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க துறை சார்ந்த அதிகாரிகளை பேரூராட்சி மன்ற தலைவர் கேட்டுக்கொண்டார்  அனைவருக்கும் ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவர் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்

கொத்துக்கொத்தாய் செத்துமடிந்த 90 ஆடுகள்-  விரைந்து சென்று உதவிய தலைவர். 
 

Tags : கொத்துக்கொத்தாய் செத்துமடிந்த 90 ஆடுகள்-  விரைந்து சென்று உதவிய தலைவர். 

Share via