அனுமதியின்றி சேவல் சண்டை_ஒரு கார் ஒரு ஆட்டோ மூன்று பைக், ரூ.1.50 லட்சம் பறிமுதல்

by Editor / 10-01-2022 05:19:05pm
அனுமதியின்றி சேவல் சண்டை_ஒரு கார் ஒரு ஆட்டோ மூன்று பைக், ரூ.1.50 லட்சம் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த மணவூர்  கண்டிகை கிராமத்தில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு புகார் சென்றதைத்தொடர்ந்து காவல்துறையினரின் அதிரடி சோதனைமேற்கொண்டனர்.இதன் தொடர்ச்சிவ்யாக அந்தப்பகுதியில்  50க்கும் மேற்பட்டோர் சேவல் சண்டைஎன்ற பெயரில் அனுமதியின்றி சேவலை வைத்து சூதாட்டம் நடத்திக் கொண்டிருந்தது  உறுதியானது.இதனை தொடர்ந்து போட்டி ஏற்பாட்டாளர்கள் இரண்டு பேர் ஒரு சொகுசு கார் ஒரு ஆட்டோ மூன்று பைக்குகள் மற்றும் ரூ.1.50 லட்சம் பணம் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.பொங்கல் பண்டிகை வந்துவிட்டதன் அறிகுறியாக இந்த சேவல் சண்டை ஆரம்பமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo