தென்காசி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் கனமழை - 2 அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது.

by Staff / 23-11-2025 11:00:49pm
தென்காசி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் கனமழை - 2 அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 575 மில்லி மீட்டர் மழைப்பொழிவானது பதிவாகியுள்ள நிலையில், இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் நீர்வீழ்ச்சிகள் மற்றும் அணைகளில் தண்ணீர் வரத்தானது தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

 குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய அணைகளில் ஒன்றான மேக்கரை அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கமானது கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது முழு கொள்ளளவை எட்டி இந்த வருடத்தில் 5-வது முறையாக நிரம்பிய நிலையில், அணைக்கு வரும் நீர்வரத்தானது அப்படியே வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் கன மழையின் காரணமாக அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கத்திற்கு சுமார் 185 கன அடி நீரானது வந்து கொண்டிருக்கும் நிலையில், அணைக்கு வரும் நீரானது அப்படியே வெளியேற்றம் செய்யப்பட்டு வருவதால், அனுமன் நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ளது.

 இதன் காரணமாக, அனுமன் நதி ஆற்றப்படுகைகள் அருகே யாரும் செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ள நிலையில், இதே போல் செங்கோட்டை குண்டாறு அணையும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்து வரும் நிலையில், கருப்பாநதி அணையானது மொத்தம் உள்ள 72.10 அடியில் 61.68 அடியையும், ராமநதி அணையானது மொத்தமுள்ள 84 அடியில் 73.50 கன அடியையும், கடனாநதி அணை மொத்தமுள்ள 86 கன அடியில் 71 கன அடியையும் எட்டியுள்ள நிலையில், அனைத்து அணைகளுக்கும் தொடர்ந்து தண்ணீர் வரத்தானது அதிகரித்து காணப்பட்டு வருவதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள மற்ற மூன்று அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.
 

 

Tags : தென்காசி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் கனமழை - 2 அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது

Share via