நெல்லை மாவட்டத்தில் கனமழை.
நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
இரவு 8 மணி நிலவரம் படி பாபநாசம் அணைக்கு 8016 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது,எட்டு மணி நேர நிலவரப்படி தாமிரபரணி ஆற்றில் பாபநாசம் அணையில் இருந்து 700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 4537 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது அணையில் இருந்து பெருங்கால் மதகு வழியாக 400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.நெல்லை மேலப்பாளையத்தில் இருந்து டவுன் செல்லும் சாலை தற்போது மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு அபாயத்தால் மூடப்பட்டுள்ளது.மாற்றுபாதை மேலப்பாளையம் குறிச்சி மற்றும் வண்ணார்பேட்டை புறவழிச்சாலை வழியாக செல்லவும்
Tags : நெல்லை மாவட்டத்தில் கனமழை.


















