காப்பகத்தில் சித்தரவதை செய்யப்பட்ட குழந்தைகள்

மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 21 குழந்தைகள் உள்ளது அவர்களை ஊழியர்கள் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் நல அமைப்பு கடந்த வாரம் இங்கு ஆய்வு நடத்தியபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில் அந்த குழந்தைகள் சிறு தவறு செய்தாலும் ஆடைகளை களைந்து நிர்வாணமாக புகைப்படம் எடுப்பது மேலும் மிளகாய் வத்தலை எரித்து அந்த புகையை சுவாசிக்க வைப்பது. உணவில்லாமல் 3 நாட்களுக்கு கழிவறையில் அடைத்து வைப்பது போன்ற கொடூர தண்டனைகளை கொடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :