44 இலட்சம் கணக்குகள் முடக்கம்-யூடியூப் அதிரடி நடவடிக்கை
யூடியூப் இன்றைய உலகில் அனைத்து தகவல்களும் கொட்டிக்கிடக்கும் மாபெரும் சமூக ஊடகமாக உள்ளது.இந்த சமூக ஊடகத்தில் ஆர்வக்கோளாறுகள் காரணமாகவும்,பெயர்வாங்க வேண்டுமென்பதற்காகவும்,ஏராளமானவர்கள் தங்களுக்கு தொடர்வதியெல்லாம் பதிவேற்றம் செய்துவருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக யூடியூப் சேனல்களை கண்காணித்து கட்டுப்படுத்தும் பணிகளை யூடியூப் நிறுவனம் செய்துவருகிறது.இதன் தொடர்ச்சியாக இந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 44 லட்சம் யூடியூப் சேனல்களை யூடியூப் நிறுவனம் தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யூடியூப் நிறுவனத்தின் சமூக விதிமுறைகளை மீறியதற்காகவும் ஸ்பேம் ரக வீடியோக்களை பதிவேற்றியதற்காகவும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 44 லட்சம் யூடியூப் சேனல்களை அந்நிறுவனம் தடை செய்துள்ளது.யூடியூப் நிறுவனத்தின் அதிரடியான இந்த தகவலால் யூடியூப் பயனர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
Tags : 44 lakh accounts frozen-YouTube Action