அரசு பஸ் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம்

by Staff / 13-05-2023 04:27:20pm
அரசு பஸ் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம்

நாகர்கோவில் அருகே லாயம் விலக்கு பகுதியில் அரசு பஸ் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த பகுதியில் கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அமைச்சர் மனோ தங்கராஜ் விபத்து நடந்த பகுதியில் முன்னேற்பாடு பணிகளை செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விபத்து நடந்த பகுதி 3 ரோடுகள் சந்திக்கும் முக்கிய பகுதியாக விளங்கி வருகிறது. இந்த பகுதியில் ஏற்கனவே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது. சமீபகாலமாக சாலையில் இருந்த தடுப்புவேலிகள் அகற்றப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து சிறு சிறு விபத்துக்கள் அந்த பகுதியில் நடந்து வந்தன. தற்பொழுது அந்த பகுதியில் நடந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள். இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் வகையில் சாலையின் நடுவே மணல் மூடைகள் அடுக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவிலில் இருந்து நெல்லை செல்லும் வாகனங்கள் ஒரு புறமாகவும் நெல்லையில் இருந்து நாகர்கோவில் வரும் வாகனங்கள் மறுபுற மாகவும் செல்லும் வசதியாக மணல் மூடைகள் வைக்கப் பட்டுள்ளது. மேலும் சாலையின் இருபுறமும் தடுப்பு வேலிகள் வைக்கப் பட்டுள்ளது. இந்த பகுதியில் மேலும் விபத்துகள் நடை பெறாமல் தடுக்கும் வகையில் நிரந்தரமாக ரவுண்டானா அமைக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கை யாக உள்ளது.

 

Tags :

Share via