நீட் தேர்வுக்கு மேலும் ஒரு மாணவன் பலி
கடந்த 2017 முதல் மருத்துவப்படிப்புகளில் சேர நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டத்திலிருந்து இன்று வரை மாணவர்களின் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது. நீட் தேர்வை வணிக லாபமாக பார்க்கும் பெரும்பாலான தனியார் பயிற்சி மையங்கள் மாணவர்களின் டாக்டர் கனவை சந்தைப்பொருளாக்கத் தொடங்கியதால் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. பயிற்சி மையங்களின் நகரமாக மாறியிருக்கும் ராஜஸ்தானின் கோட்டா நகரில் உள்ள மையத்தில் படித்து வந்த உத்தரப் பிரதேச மாணவர் ஒருவர் நேற்றிரவு தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :