தீ விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சிறார் விளையாட்டு மையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள வணிக வளாகப் பகுதியில் சிறுவர்களுக்கென பிரத்யேகமான டிஆர்பி விளையாட்டு மையம் (TRP game zone) செயல்பட்டு வந்தது. இங்குள்ள தற்காலிக அமைப்பு ஒன்றில் சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். எனது எண்ணங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வழிகளிலும் உதவ உள்ளூர் நிர்வாகம் கடுமையாக உழைத்து வருகிறது" என்று அவர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Tags : தீ விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்