கட்சிக்கு கட்டுப்படுவேன் திருச்சி சூர்யா.

by Editor / 24-11-2022 09:40:13pm
கட்சிக்கு கட்டுப்படுவேன் திருச்சி சூர்யா.

பாஜக ஓபிசி மாநில பொதுச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் திருச்சி சிவாவின் மகன் சூர்யா , அக்கட்சியின் பெண் நிர்வாகியான டெய்ஸியை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ 2 நாட்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சூர்யா  மீது நடவடிக்கை எடுக்காமல் பாஜக தலைவர் அண்ணாமலை காலம் தாழ்த்துவதாக சர்ச்சை எழுந்த நிலையில், அண்ணாமலைக்கு களங்கம் ஏற்படுத்தவே இந்த விஷயத்தை பரப்பி வருவதாக திருச்சி சூர்யா விளக்கம் அளித்துள்ளார். மேலும் தவறு எனும் பட்சத்தில் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo